மாணவர் வெற்றிக்கு உறுதுணையாக யுரேனஸ் இளைஞர் அமைப்பு

சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் தரம் 04 மாணவர்கள், “செயல்பட்டும் மகிழ்வோம்” எனும் வலையமட்ட விளையாட்டுப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றிருந்தனர்.

அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில், மாணவர்கள் மேலும் ஊக்கமுடன் விளையாடும் நோக்கில் எமது யுரேனஸ் இளைஞர் அமைப்பால் இன்று விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் அமைப்பின் தலைவர் திரு. க. சிம்சுபன், உபதலைவர் ந. குயின்ஷா மற்றும் அமைப்பாளர் ஜோ. தன்சிகா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இதற்கான நிதி பங்களிப்பை சமூக பொறுப்புடன் இணைந்த கரங்கள் அமைப்பினர் வழங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான முயற்சிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கும், சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக அமையும் என்பதை நாங்கள் நம்புகிறோம்.





0 கருத்துகள்