தொலை நோக்கு

சுதந்திரமான கருத்தியல் வளமுள்ள ஒழுக்கம் பேணும் இளம் சந்தி

திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம்

இளைஞர்களின் திறன்கள், தொழில்நுட்ப அறிவு, மற்றும் முன்னோடியான முயற்சிகளை ஊக்குவித்து, தற்காலிகம் மற்றும் நீடித்த தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது.

சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலன்

இளைஞர்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபடுத்தி, சமூக நலத்திற்கான திட்டங்களில் வழிகாட்டியாக மாற்றுவது.

சமாதானம், இன ஒற்றுமை மற்றும் ஜனநாயக ஈடுபாடு

மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து சமூக ஒற்றுமையை வளர்க்கும் இளைஞர் இயக்கங்களை வலுப்படுத்தல்.

இளைஞர் தலைமைத்துவம், கலாச்சாரம் மற்றும் விளையாட்டு

இளைஞர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தவும், தலைமைத் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் ஆதரவு அளிக்கும் தளம்.

"இளைஞர்களுடன் செயலாற்றுவதில் எங்களுக்குப் பெருமிதம்! "

தங்களது தனித்திறன்களை தயக்கமின்றி வெளிப்படுத்தவும், வளர்ச்சிக்கான புதிய வாயில்களை உருவாக்கவும், அதனை ஆக்கப்பூர்வமான மற்றும் நீடித்த முயற்சிகளில் பாதுகாத்து கொண்டு செல்லவும், இளைஞர்கள் தங்களால் – இளைஞர்களுக்காக – சிறுவர்களுக்காக பலதரப்பட்ட திட்டங்கள் மற்றும் செயற்க்களங்களை முன்னெடுத்து வருகின்றனர். இது வெறும் இயக்கமல்ல – இது ஒரு மாற்றத்தின் பயணம்! இளைஞர்களின் குரலும், செயலும் இந்த சமூகத்தின் நம்பிக்கையான எதிர்காலத்தை நிரூபிக்கின்றன.

145

அங்கத்தவர் எண்ணிக்கை

16

இயங்கும் கிராமங்கள்

17

நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள்

எங்களைப் பற்றி

30 வருட விடுதலை போராட்டத்தில் பல விடுதலை போராட்ட குழுக்கள் மத்தியில் இருந்த கிராமங்களே சமளங்குளம் ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள கிராமங்கள் ஆகும். இந்த கிராமங்களில் உள்ள இளைஞர் கழகங்கள் விடுதலை போராட்ட குழுக்கள் மூலமே எமது கழகம் 1992 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது.

விளையாட்டு மற்றும் வெளிக்கள பன்முக செயற்பாடு

உடல் உள சமுதாய பண்பாட்டுவளர்ச்சி ஆகியவற்றை வளர்க்கக் கூடிய பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களில் இளைஞர்களை பங்கு கொள்ளச் செய்வதன் மூலம் ஆக்கத்திறன் உள்ள இளைஞர்களை உருவாக்கும் செயற்றிட்டம்

கல்விப் பயிற்சி மற்றும் தொழில் வழிகாட்டல்

தொழில் வழிகாட்டுதல் வேலை , கல்வி மற்றும் தொழில்முறை நடைமுறை வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் விரிவாக்குவதற்கும் வலுவாக கவனம் செலுத்துவதால், அத்தகைய வழிகாட்டுதலும், தொழிலாளர் சந்தையை அணுகுவதற்கான உண்மையான வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தல்

அறிவிப்பு மற்றும் கலாசாரம்

இன்றைய சூழலில் பன்மைத்துவம், மதங்களுக்கு இடையிலான பல்லினத்தன்மை பற்றி அதிகமாக பேசப்படுகின்றது. எனினும் வெறுமனே பேசுவதை விடுத்து குறித்த பன்மைத்தன்மையை அங்கீகரிப்பதற்கான மனப்பான்மையை இனங்களுக்கு இடையே ஏற்படுத்த தேவையான செயற்றிட்டங்கள் உருவாக்குதல்

பின்புலம்

பொதுவாக ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் வளர்ச்சிக் கூறுகளின் நிலைத்த தன்மைக்கும், உந்து சக்திகளாக பல்வேறு காரணிகள் அறியப்பட்டாலும் அவற்றுள் முதன்மையானது மட்டுமல்ல தவிர்க்க முடியாத சக்தியாகவும் முன்நிற்பது அந்த சமூகத்தின் இளைஞர்களே ஆவர். புதிய சிந்தனைகள், மேம்பட்ட திறன்கள், புதுமைகளை உள்வாங்கும் நிலை, தளராத முயற்சி, வளர்ச்சி நோக்கிய இலக்கு, நவீன உத்திகளைக் கையாளுதல் போன்ற எண்ணற்ற பரிமாணங்கள் இளைஞர்களின் தகுதியையும் தரத்தையும் உயர்த்திப் பிடிப்பதால் அவர்களை விலக்கி வைத்துவிட்டு வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வது இயலாததாகும்.

எங்கள் இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள்

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை

இளைஞர் யுவதிகள் மத்தியில் இன மத வேறுபாடின்றி பின்தங்கிய கிராம மட்டத்தில் இருக்கும் இளைஞர் யுவதிகளின் திறன்களை வெளிக்கொண்டுவர விரும்புகிறேன்.

தன்சிகா

தன்சிகா

அமைப்பாளர்

தனக்கான சிறந்த சரியான பாதையை தெரிவு செய்து நேர்த்தியாக வாழக்கூடிய சமுதாயத்தை உருவாக்க விரும்புகிறேன்

மதுசாலினி

மதுசாலினி

உறுப்பினர்

இளையோருடன் இணைந்து ஒழுக்கம் நிறைந்த சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்ப விரும்புகிறேன்

சிவதாரணி

சிவதாரணி

Fashion Bloggerசுற்றுசூழலியல் பிரிவின் செயலாளர்

கிராமங்களில் முடங்கிக்கிடக்கும் இளைஞர்களின் திறன்களை வெளிக்கொணர விரும்புகிறேன் .

லக்சிகா

லக்சிகா

நிர்வாகசபை உறுப்பினர்

அண்மைக்கால நடவடிக்கைகள்

எங்கள் அண்மைய கால நடவடிக்கைளை அறிந்து கொள்ள

 மாணவர் வெற்றிக்கு உறுதுணையாக யுரேனஸ் இளைஞர் அமைப்பு
 பசுமையை விதைத்தோம் எதிர்காலத்தை வளர்த்தோம்!
 சுற்றுச்சூழல் தின நிகழ்வு மாணவர்களுடன் சிறப்பாக நடைபெற்றது.

நிர்வாக சபை

2025 ஆம் ஆண்டுக்கான எங்கள் நிர்வாகசபை

தலைவர்

தலைவர்

கணேசலிங்கம் சிம்சுபன்
செயலாளர்

செயலாளர்

ஜெகநாதன் பிருந்தா
பொருளாளர்

பொருளாளர்

மகேந்திரன் சிந்துஜன்